பேராயர் ராபர்ட் கால்டுவெல் & ஜி யு போப் - தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநருக்கு நன்றிகள்!!
"சங்கு சுட்டாலும் மேன்மை தரும்", "கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே". மூதுரை
இன்று தமிழ் அறிஞர்கள் பேராயர் ராபர்ட் கால்டுவெல் மற்றும் டாக்டர் ஜி யு போப் குறித்து தமிழக ஆளுநர் வன்மத்தோடு விமர்சனங்களை வீசி இருந்தாலும், தமிழகம் முழுவதும் இன்று அவர்கள் தேடும், பேசும் பொருளாகியுள்ளனர்.
இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? எதற்காக வந்தனர்? என்ன செய்தனர்? படித்தனரா? பட்டம் பெற்றனரா? தமிழுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார் தமிழக ஆளுநர்.
குறிப்பிட்ட மக்கள் மட்டுமே அறிந்திருந்த இந்த அறிஞர் பெருமக்களை உலகறிய செய்த ஆளுநருக்கு நன்றிகள்.
"நசுக்கப்படும் ஒரு மூட்டை பூச்சியில் இருந்து புது உயிர்கள் அநேகம் பெருகும்" இதைப் போலத்தான் கிறிஸ்தவமும், தமிழ் மொழியும் நசுக்க நினைத்தால் கனவிலும் இயலாது.
இந்த உண்மைகளை எடுத்துக்காட்டிய ஆளுநருக்கு நன்றி, நன்றி, நன்றி.,
இங்கனம்
ச. டேவிட் நோவா
(பேராயர் ராபர்ட் கால்டுவெல் பெயரை தாங்கி கம்பீரமாய் நிற்கும் கல்லூரியில் படித்த மாணவன்)
Comments
Post a Comment