St.Patrick's History in Tamil


அயர்லாந்தின் அப்போஸ்தலர் தூய பேட்ரிக் அவர்களின் வாழ்க்கை வரலாறு

கிபி 385ம் ஆண்டு பிரிட்டன் தேசத்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் ரோமானிய பெற்றோரான கல்பூர்ணியஸ் மற்றும் கொன்சேசாக்கு   பிறந்தவர் பேட்ரிக்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிறிஸ்துவை பற்றி என்னாத நாத்திகராகவே வாழ்ந்து வந்தார்.

16 ஆவது வயது சிறுவனாக இருந்தபோது கொள்ளை கூட்டத்தினரால் கடத்தப்பட்டு அயர்லாந்து தேசத்தின் மில்ச்சு என்ற ஒருவரிடம் அடிமையாக விற்கப்பட்டார்.  அங்கு அவருக்கு ஆடு மற்றும் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. முன்பு ஆண்டவரை தேடாமல், நினையாமல் இருந்த சிறுவன் பேட்ரிக் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்து அதிகாலையில் சீக்கிரமாய் எழும்பி ஜெபித்து பின் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அந்நிய தேவதைகளுக்கு பலியிட்டு வழிபாடு நடத்துதல் இவரை மிகவும் பாரபடுத்தியது. இதற்காக ஊக்கமாக ஜெபித்தார். பின்னானில் ஆண்டவரின் ஊழியத்தை செய்ய தன்னை அர்பணித்தற்கு இதுவே ஒரு முக்கிய காரணம்.

எப்படியும் இந்த அடிமை வேலையிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்று விரும்பினார்.  ஆறு ஆண்டு அடிமைத்தனத்திற்கு பின்  ஒரு நாள் ஜெபம் செய்யும் பொழுது "நீ சீக்கிரத்தில் உனது தாய் நாட்டுக்கு செல்ல போகிறாய். உனக்கான கப்பல் தயாராக உள்ளது" என்ற ஆண்டவரின் வார்த்தையை கேட்டு தான் அடிமையாக பணியாற்றிய இடத்திலிருந்து 200 மைல் தூரம் ஒடி  கடந்து அசரீரி கேட்டப்படியே துறைமுகத்தில் கப்பலை கண்டு ஏறினார். ஆறு ஆண்டு கால அடிமை வாழ்வு முடிந்தது. கடற்பயணத்தின் போது சாப்பாடு சாமான்கள் தட்டுப்பாடுஆயிற்று. அப்போது பேட்ரிக ஊக்கமாக ஜெபித்தார். திடீரென ஒரு வாத்து கூட்டம் கடற்கரை அருகில் வர உணவு பஞ்சம் தீர்ந்தது. இப்படியாக இரண்டு மாத கடற்பயனத்திற்கு பின் தன் சொந்த தேசம் திரும்பினார்.

ஒரு நாள் ஆண்டவர் சொப்பனத்தில் தோன்றி "Please, Holy boy come and walk among us again"  "புனித சிறுவனே மீண்டும் எங்களிடம் வந்து விடு நீ எங்களுக்கு தேவை" என்றார். இந்த அழைப்பை ஏற்று கிபி 415 ல் ஊழியத்திற்கென்று படிக்க தன்னை அர்ப்பணித்தார். கிபி 417 ல் குருவாக அருட்பொழிவு பெற்று Auxere என்ற இடத்தில் பணியாற்றினார்.

உலகின் இயற்கை எழில் வாய்ந்த தீவுகளில் ஒன்றான அயர்லாந்து ஐந்தாம் நூற்றாண்டு வரை இருட்டில் இருந்தது. யுத்தமே கதியென்றிருந்த பிரபுக்கள், ரத்த சகதியான இந்த நிலத்தையும், மக்களையும் ஆண்டு வந்தனர். 

இந்த தேசத்திற்கு கடல் தாண்டி கிறிஸ்துவின் வெளிச்சத்தை கொண்டு செல்ல பேராயர் Germanius என்பவரால் ஊழியத்துக்காக அயர்லாந்து தேசத்திற்கு அனுப்பப்பட்டவர் தான் பேட்ரிக். அவர்கள் 432 ஆம் ஆண்டு அயர்லாந்தின் முதல் பேராயர் புனித பலேடியஸ் ஸ்காட்லாந்து தேசத்திற்கு மாற்றப்பட அந்த  இடத்திற்கு பேராயராக அபிஷேகிக்கப்பட்டார்.

                               இவர் திட்டமான அழைப்பை பெற்ற ஒரு ஊழியர்.

அக்காலத்தில் அயர்லாந்தின் பல பழங்குடியினர் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொரு தலைவன் மற்றும் பல தலைவர்கள் சேர்ந்து ஒரு ராஜாவை சேவித்தனர்.  அந்த அரசரை 40 வெண் அங்கி தரித்தவர்களுடன் சந்திக்க பாடி சென்றார். தான் இந்த தேசத்திற்கு அச்சுறுத்தல் அல்லவென்றும் கிறிஸ்துவின் ஒளியை கொடுக்க வந்திருப்பதாகவும்  எடுத்துரைத்தார்.  அரசர் சந்திக்கப்பட்டார் ஆனாலும் துர் கிரியைகள் செய்யும் மந்திரவாதிகளால் துன்புறுத்தப்பட்டார் எனினும் சோர்வின்றி எதிர்ப்பின் மத்தியிலும் சுவிசேஷத்தை அறிவித்தார் பேராயர் பேட்ரிக்.

ஒரு முறை பேட்ரிக் அவர்கள் தன்னை அடிமையாக வைத்திருந்த மில்ச்சுவை சந்திக்க சென்றார். ஆனால் அவரோ அவரை பார்க்க மனமின்றி அவமானத்தினால் தன் வீட்டிற்கு தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூன்று வளைவுகளையுடைய சாம்ராக் இலைகளை பயன்படுத்தி திரித்துவதை எளிமையாக விளக்கினார்.


 444 ஆம் ஆண்டு பேராயர் பேட்ரிக் "The Church Of Ireland" ஐ ஸ்தாபித்தார்.  சிதறி கிடந்த கிறிஸ்தவர்களை ஒன்று சேர்த்து பல கல்வி ஸ்தாபனங்களை ஆரம்பித்தார். 




ஒரு குன்றின் மேல் பெரிய பேராலயத்தை கட்டினார் இது "The Down of Patrick" என்று அழைக்கப்படுகிறது.



கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும், சுவிசேஷம் அறிவிப்பதையும் அதிகமாக சபையில் வலியுறுத்தி வந்தார்.

இவர் செய்த ஊழியத்தின் வாயிலாக அயர்லாந்து முழுமையும் ஆண்டவருக்குள் வழிநடத்தப்பட்டது. நச்சுப் பாம்புகள் அதிகமாய் இருந்த அயர்லாந்து பாம்புகள் இல்லாத தேசமாய் மாறியது. பின் காலத்தில் அயர்லாந்தில் இருந்து அநேக மிஷினரிகள் எழும்பினார்கள்.

அயராது உழைத்த பேராயர் பேட்ரிக் கிபி 460 ஆம் ஆண்டு தன்னுடைய 72 ம் ஆம் வயதில் மார்ச் 17ஆம் தேதி தேவனாடு இருக்க அழைக்கப்பட்டார். அவரது நினைவு நாள் ஆன மார்ச 17ம் தேதி பேட்ரிக் தினமாக உலகமெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

தூய பேட்ரிக் அவர்களது வாழ்க்கையை பல கோணங்களில் படித்த பின்னர் அவர் "திட்டமாய் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர், திடமாக சுவிசேஷத்தை அறிவித்தவர், திறனாக பரிசுத்த வாழ்வை சபை மக்களிடம் புகுத்தியவர்" என்பதை அறியலாம்.

ஐந்தாம் நூற்றாண்டின் பரிசுத்தவானாகவும், அயர்லாந்தின் அப்போஸ்தலராகவும் உயர்த்தப்பட்டவர் தூய பேட்ரிக் என்பதை புரிந்து நமது ஆலயத்திற்கு அவரது திருப்பெயரையை வைத்து மிக பொருத்தமே. இதற்காக   ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம்.


அவரது பெயரை நம் ஆலயத்திற்கு சூட்டிய அயர்லாந்திருந்து வந்த மிஷனரி, பேட்ரிக் ஆலயத்தின் தந்தை அருள்திரு J.F.கேர்ன்ஸ் ஐயர் அவர்களை நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

17.03.2023 
பேட்ரிக் தினம்.

Comments

Popular posts from this blog

அசன பண்டிகை Asanam Festival

தூய பேட்ரிக் இணைப் பேராலயம்- St.Patricks Co-Cathedral (Short History)