சங்கம் நமது உரிமை
சங்கம்
நமது உரிமை
பழைய ஏற்பாட்டில் காணிக்கையை கொண்டுவந்து
ஆசாரியனிடத்தில் கொடுத்தார்கள் அதை தனக்காகவும் தன் குடும்பத்திற்கும் வைத்துக்கொன்டார்கள்.
ஆசாரியர்கள்தங்களுக்கு போக மிச்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தார்கள். புதிய ஏற்பாடு ஆதி திருச்சபையில் யாராவது ஒருவர்
பொருளாதார சிக்கலை சந்தித்தபோது மற்றவர்கள் உதாரத்துவமாக உதவி செய்து அவர்கள் தேவையை
சந்தித்தார்கள். (அப்2:32-37, 11:29,30) இதற்காக பலர் தமாக முன்வந்து தங்கள் சொத்துகளை விற்று அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்து பொதுவாய் அனுபவித்தார்கள். எதையும் தங்களுடையது என்று சொல்லவில்லை
நம் மண்ணில் வந்த மிஷினரிகளும் குருவானவரும் ஜீவனும்
பண்ண ஆலயத்தில்படைக்கப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பொருள் காணிக்கைகள்
போதுமானவையாக இருந்தன. ஆனால் அதையும் தாண்டி அவர்களுடைய தேவையை சந்திப்பதற்காக சபை
விசுவாசிகள் ஒவ்வொருவரும் சிறிய அளவு பணமாக காணிக்கை படைக்கும் ஒழுங்கு முறை திருச்சபையில் ஏற்படுத்தப்பட்டது. அது குருவானவருக்கும் ஊழியர்களுக்கும் சம்பளமாக அவர்களது தனிப்பட்ட தேவையை
சந்திப்பதற்கு உதவியாக அமைந்தது.
1947ம் ஆண்டு CSI அமைப்பு ஏற்படுத்தப்பட்டபோது
இதில் உறுப்பினராவதற்கு சந்தா(சங்கம்) செலுத்தும் முறைமை உருவாக்கப்பட்டது.சபையில்
அங்கமில்லாத ஏழை எளியவர்களுக்காகவும், ஊழியருக்காகவும் கொடுக்கப்பட்ட காணிக்கை இன்று
சபையில் அங்கத்தினர்கள் ஆவதற்காக என்று மாற்றப்பட்டுள்ளது. திருச்சபை விதிகளில் சங்கம்
செலுத்துவதற்கு ஒரு நிதி ஆண்டு முழுவதும் அதாவது ஏப்ரல் 1முதல் மார்ச்31 வரை அவகாசம்
இருக்கிறது. முழுச்சங்கம் கட்டினவரே அங்கத்தினர்கள் ஆவார்கள் என்ற விதிமுறை உள்ளது
அதனால் தான் திருமணம் மற்றும் இறப்பின் போது அவர்களுக்கான முழுச்சங்கத்தையும் அந்த
நேரத்திலேயே வசூலிக்கும் வழக்கம் இருக்கிறது .சில ஆலயங்களில் ஏழைகள் உதவி பெறுவதற்கு
முழுச்சங்கம் கட்டாயம்.
ஒரு திருச்சபையின் அங்கத்தினர்
என்றால் ஞானஸ்நானம்,திடப்படுத்தல் பெற்று முழுச் சங்கமும் கட்டியிருக்கவேண்டும். ஒரு
திருச்சபையில் அங்கத்தினராய் இருப்பதினாலே அதில் சில உரிமை உள்ளவர்களாகவும் இருக்கிறோம்.அந்த
உரிமை என்னவென்றால் திருச்சபையில் ஆண்டவரை சுதந்திரமாக ஆராதிப்பது, ஆலயத்தில் வேலை
செய்யவும், நல்ல யோசனையை கூறுவதற்கும், ஏதேனும் காரியங்கள் தவறாக நடக்கும் பட்சத்தில்
தவறை சுட்டிக்காட்டவும் கேள்விகேட்கவும் முடியும்.
உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும்
உள்ள சங்கபணத்தை நீங்களே கட்டுங்கள் மற்றவர்களை கட்ட அனுமதிக்காதீர்கள் அப்படி சங்கத்தை
உங்கள் சார்பாக மற்றவர்கள் கட்டும்போது முதலாவது உங்கள் உரிமையை இழந்தவர்கள் ஆவீர்கள்.
சரி நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன்
சங்கம் நபருக்கு 600ரூபாய் குடும்பத்தில் 6பேர் இருக்கிறார்கள் அப்படியானால் வருடத்திற்கு
3 ஆயிரத்து 600 ரூபாய் கட்டவேண்டும் அல்லது மாதம் 300 ரூபாய் செலுத்தவேண்டும் என்ன
செய்வதென்று யோசித்தீர்கள் என்றால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது முதலாவது நீங்கள்
செலுத்தும் சங்கபணம் அது ஆண்டவருக்கு செலுத்தும் காணிக்கை இதை உற்றாகமாகத்தான் கொடுக்க
வேண்டும். கடமைக்காக கணக்குப்பார்த்து கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது அல்ல.
இரண்டாவது என் குடும்பத்திற்கான சங்கபணத்தை நான்தான் கட்டவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால்
முன்கூட்டியே எளிதாக திட்டமிட்டு மாதம் ஒருமுறை சரியாக கட்டிவிடலாம்..
அன்பிற்குரியோரே திருச்சபையில்
கட்டவேண்டிய சங்கத்தை இதுவரை செலுத்தாமல் இருந்தால் அல்லது குறைவாக செலுத்தியிருந்தால்
சபை அங்கத்தினர்கள் என்ற உரிமை பறிபோகும்முன், அதாவது மார்ச் 31-க்குள் சங்கத்தை முழுமையாக
செலுத்தவேண்டும்.இக்கடமையை சரியாக செய்து உரிமையை மீட்டுக்கொள்வோம்.
சங்கம்
அது ஆண்டவருக்கு காணிக்கை, சங்கம் அது நமது உரிமை
Comments
Post a Comment