St.Patrick's History in Tamil
அயர்லாந்தின் அப்போஸ்தலர் தூய பேட்ரிக் அவர்களின் வாழ்க்கை வரலாறு கிபி 385ம் ஆண்டு பிரிட்டன் தேசத்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் ரோமானிய பெற்றோரான கல்பூர்ணியஸ் மற்றும் கொன்சேசாக்கு பிறந்தவர் பேட்ரிக். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிறிஸ்துவை பற்றி என்னாத நாத்திகராகவே வாழ்ந்து வந்தார். 16 ஆவது வயது சிறுவனாக இருந்தபோது கொள்ளை கூட்டத்தினரால் கடத்தப்பட்டு அயர்லாந்து தேசத்தின் மில்ச்சு என்ற ஒருவரிடம் அடிமையாக விற்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆடு மற்றும் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. முன்பு ஆண்டவரை தேடாமல், நினையாமல் இருந்த சிறுவன் பேட்ரிக் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்து அதிகாலையில் சீக்கிரமாய் எழும்பி ஜெபித்து பின் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அந்நிய தேவதைகளுக்கு பலியிட்டு வழிபாடு நடத்துதல் இவரை மிகவும் பாரபடுத்தியது. இதற்காக ஊக்கமாக ஜெபித்தார். பின்னானில் ஆண்டவரின் ஊழியத்தை செய்ய தன்னை அர்பணித்தற்கு இதுவே ஒரு முக்கிய காரணம். எப்படியும் இந்த அடிமை வேலையிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்று விரும்பினார். ஆறு ஆண்டு அடிமைத்தனத்திற்கு பின் ஒரு நாள் ஜெப...