Posts

Showing posts from December, 2024

தூய பேட்ரிக் இணைப் பேராலயம்- St.Patricks Co-Cathedral (Short History)

Image
  தூய பேட்ரிக் இணைப் பேராலயம் தூத்துக்குடி   235 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தூய பேட்ரிக் இணைப் பேராலயம் தூத்துக்குடி மாநகரின் சீர்திருத்த திருச்சபையின் முதல் தாய் திருச்சபை . கிபி முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் சீடர் புனித தோமா வழியாக இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்துவிட்டது எனினும் தூத்துக்குடியில் 1789 களில் திரு.ராயப்பன் மற்றும் திரு சத்தியநாதன் இருவரும் தூத்துக்குடி பகுதியில் செய்த ஊழியங்கள் மூலம் 200 க்கும் அதிகமான நபர்கள் திருமுழுக்கு பெற்று சீர்திருத்த தமிழ் சபை வடக்கூரில்   உருவாக்கப்பட்டது . இங்கு Rev.J.J. பெஸ்ட் ஹென்றி போப் , Rev . ரிச்சர்ட் போப் (Dr.G.U. போப்பின் இளைய சகோதரர் ) இந்த பகுதியில் 1857 வரை பணி செய்தனர் . இவருக்கு பின்பு 1857 ஆம் ஆண்டு புதியம்புத்தூரை மையமாகக் கொண்டு SPG மிஷனரி ஆக பொருப்பெடுத்தவர் Rev.J.F கேர்ன்ஸ் . இவர் பணி செய்த 1857 முதல் 1873 காலத்தில் தூத்துக்குடி வடக்கூர் சபை புத்துயிர் பெற்றது . Rev.J.F கேர்ன்ஸ் தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு அரும்பாடு...