Posts

Showing posts from July, 2024

அனிதா மேரி பாக்கியம்

சகோதரி அனிதா மேரி பாக்கியம் (1975-2004) "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்" என யோவான் 12:24-ல் வாசிக்கிறோம். இப்படியாக இன்னொரு கோதுமை மணியாக மிஷனெரிகளின் கல்லறை' என்று அழைக்கப்பட்ட பீஹாருக்கு மிஷனெரியாகச் சென்ற சகோதரி #அனிதா_மேரி_பாக்கியம் 2004-ம் ஆண்டு 27-ம் தேதி ஜுலை மரித்தார். இன்று #மால்தோ மக்கள் மத்தி யில் பலநூறு திருச்சபைகள் எழும்பி ஓர் #இராஜ்மஹால்_பேராயம் தோன்றி மால்தோ விசுவாசிகளே ஆயர்களாகவும் பேராயராகவும் உருவாகியிருப்பதைக் காண்கிறோம். தங்கள் ஜீவனைப் பணயம் வைத்து உழைத்து மரித்த இந்த அர்ப்பணமுள்ள ஊழியர்களாலும், அநேகருடைய ஜெபத்தினாலும் ஈகை யினாலும் இது சாத்தியமாயிற்று. இளமைப்பருவம் சகோதரி  அனிதா மேரி பாக்கியம் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் 1975-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். அவருடைய தந்தை திரு. D.லூக் பால்ராஜ். ஒரு சாதாரண தொழிலாளி, அனிதா சிறுமியாக இருக்கும் போதே அவருடைய தாயார் கால மானார்கள். அனிதாவிற்கு ஒரு அக்காள் மட்டும் உண்டு. அவர் மிகவும் ஏழ்மை யான குடும்பத்தில் பிறந்...