சங்கம் நமது உரிமை
சங்கம் நமது உரிமை பழைய ஏற்பாட்டில் காணிக்கையை கொண்டுவந்து ஆசாரியனிடத்தில் கொடுத்தார்கள் அதை தனக்காகவும் தன் குடும்பத்திற்கும் வைத்துக்கொன்டார்கள். ஆசாரியர்கள்தங்களுக்கு போக மிச்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தார்கள். புதிய ஏற்பாடு ஆதி திருச்சபையில் யாராவது ஒருவர் பொருளாதார சிக்கலை சந்தித்தபோது மற்றவர்கள் உதாரத்துவமாக உதவி செய்து அவர்கள் தேவையை சந்தித்தார்கள். (அப்2:32-37, 11:29,30) இதற்காக பலர் தமாக முன்வந்து தங்கள் சொத்துகளை விற்று அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்து பொதுவாய் அனுபவித்தார்கள். எதையும் தங்களுடையது என்று சொல்லவில்லை நம் மண்ணில் வந்த மிஷினரிகளும் குருவானவரும் ஜீவனும் பண்ண ஆலயத்தில்படைக்கப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பொருள் காணிக்கைகள் போதுமானவையாக இருந்தன. ஆனால் அதையும் தாண்டி அவர்களுடைய தேவையை சந்திப்பதற்காக சபை விசுவாசிகள் ஒவ்வொருவரும் சிறிய அளவு பணமாக காணிக்கை படைக்கும் ஒழுங்கு முறை திருச்சபையில் ஏற்படுத்தப்பட்டது. அது குருவானவருக்கும் ஊழியர்களுக்கும் சம்பளமாக அவர்களது தனிப்பட்ட தேவையை சந்திப்பதற்கு உதவியாக அம...